கருவேலமரம் நீரை உறிஞ்சி விடுகிறது.. யூகலிப்டசும் அவ்வாறே . . . கேரிபேக்கால் தான் எல்லாமே கெட்டுவிடுகிறது . . . என்றஅப்பாவித்தனங்களை தாண்டி கொஞ்சம் சிந்திக்க வேண்டிய தருணம் இது ! ( உறிஞ்சிய நீருக்கு என்ன நேர்ந்துவிடும் என்று அறிவியல் பூர்வமாக சிந்தித்திருக்கிறோமா? எதன்மீதாவது பழிபோட்டு நம்மை தப்பிக்கவைத்துக்கொள்ளும் போலி அறிவு அது . . நம் வீட்டுக்கு தரப்படும் சுத்தமான தண்ணீரை நாம் எப்படி மாற்றிவிடுகிறோம் என்று கொஞ்சமாவது சிந்தித்திருக்கிறோமா ? நிலத்தடி நீரை 1000 அடி போர் போட்டு அதிகம் உறிஞ்சுவது பம்பு செட்களும் மனிதனும்தான் ) இயற்கையை நாம் குறைத்து எடைபோட்டுவிடக்கூடாது ! ஒரு சின்ன இயற்கை உறுப்பு செயலிழந்துவிட்டால் எத்தனை இலட்சங்கள் செலவழித்தும் பயனில்லாமல் போகிறது என்பதை ஒரு மருத்துவரிடம் கேட்டால் புரியும் ! இயற்கை எனப்படும் நீர் நெருப்பு நிலம் காற்று ஆகாயம் எனப்படும் பஞ்சபூதங்களும் நம்மை இந்த உலகத்தில்ஓரளவு மாறாவிகிதத்தில் இருக்கும் வரை.. நம்மை மட்டும் அல்ல.. இலட்சக்கணக்கான பலவித உயிர்களையும் அது உருவாக்கி பாதுகாத்து அழித்து தன் கடமைகளை ஆற்றிவருகிறது. ஆனால் அதன் உயர்ந்த பட்ச கருணையை அறிவை பெற்ற உயிரினமான நாம் நமது சிற்றறிவு பலத்தால் அதை மதிக்காமல் ஆடம்பர கார்கள் பங்களா பதவி என்று சீக்கிரம் அழியும் மாயைகளுக்கு ஆசைப்பட்டு இந்த பஞ்ச பூதங்களையும் சிதைக்கிறோம் .. நச்சாக்குகிறோம்... அழித்தே விட துணிகிறோம் ! மனிதனை விட இயற்கையை பாழ்படுத்தும் ஒரு விலங்கையோ, தாவரத்தையோ (க்ருவேல) மரத்தையோ நான் அறிந்திலன். இனியேனும் நமது செயல்கள் அனைத்தும் இயற்கையின் மீது மரியாதையாய் இருக்கும்படி நமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வோம் என்று சபதமேற்போம் ! என்னை ப்பொறுத்தவரை நான் போதிக்கும் பின்பற்ற ம்யற்சிக்கும் குறை தாக்க வாழ்க்கை முறையை விட சிறந்த ஒன்றை இந்தப்பிறவியில் முக்கியமான அறிவாக... மதமாக... உணர்வாக... கண்டிலேன் ! மழை நீர் வடிந்ததும் மீண்டும் “பழைய கண்பார்வையற்றவள்.. கதவைத்திறடி” என்று இருந்துவிடாமல் ஞாயிறு, மண், மரம் மழை, மானுடம் போற்றி வாழ்வோம் !
No comments:
Post a Comment