Monday, February 20, 2017

நதிகளை ஏன் இணைக்கக்கூடாது ?

நதிகளை ஏன் இணைக்கக்கூடாது ?

நதி நீர் வீணாக கடலில் கலக்கிறது என்பதை பலமுறை செய்திகளில் கேட்டிருக்கிறோம். இங்கே "வீண்" என்று சொல்லப்படுவது சரிதானா? நதி நீர் கடலில் கலப்பது என்பது இயற்கை சுழற்சியின் ஒரு பகுதி. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இது நடந்து கொண்டே இருந்தது. கடந்த இரண்டு நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றங்களால் நதி என்பது தேக்கிவைக்க்பட வேண்டிய ஒன்று என நம் பொதுபுத்தியில் பொதிந்து போயிற்று. நதி என்பது மனித பயன்பாட்டுக்கு மட்டுமே என்ற சுயநலச் சிந்தனை நம் எல்லோருக்கும் மீண்டும் மீண்டும் ஊடகங்களால் போதிக்கபடுகிறது.




நதிகள் இணைப்பை பற்றி பேசும் முன்னர் நதிகளை பற்றிய புரிதல் நமக்கு அவசியம். நதிகளுக்கு உயிர் கிடையாது. ஆனால் நதிகள் உயிர்ப்போடு இருப்பது அவசியம். இந்தியாவில் ஓடும் நதிகளில் முக்கியமான நதிகளை இரண்டாக பிரிக்கலாம். மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நதிகள் மற்றும் இமயமலைத் தொடரில் உருவாகும் நதிகள். இமயமலையில் உருவாகும் நதிகள் பெரும்பாலும் பனி உருகியே உருவாகிறது. ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நதிகள் முற்றிலும் வேறானவை.



மேற்குத் தொடர்ச்சி மலையில் பொழியும் தென் மேற்கு பருவமழை அந்த மலைத் தொடரின் உச்சியில் உள்ள சோலைக்காடுகளால் சேமிக்கப்படுகிறது. சோலைக்காடுகளில் உள்ள புல்வெளிகளால் இந்த மழை நீர் உறிஞ்சப்பட்டு பஞ்சில் உள்ள நீர் போல சேமிக்கப்படும். பிறகு இந்த நீரானது மெல்ல மெல்ல வெளிவரும். இதுவே ஓடைகளாகவும் அவை இணைந்து நதிகளாகவும் மாறும். கோடை காலங்களிலும் இப்படி சேமிக்கப்படும் நீர் வெளிவந்து கொண்டே இருக்கும். எனவே ஆற்றில் எப்போதும் நீரோட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த சுழற்சியால் தான் பல்வேறு உயிரினங்களும் தென்னிந்தியாவில் பரிணாம வளர்ச்சி பெற்று வாழ்ந்து வந்தன. மனிதனும் இதனால் பயனடைந்து வாழ்ந்து வந்தான். எனவே மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நதிகளுக்கென்று ஒரு தனித் தன்மை உண்டு. ஒவ்வொரு நதிகளிலும் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. காவிரியில் வாழும் மீன்கள் எல்லாம் கங்கையில் வாழ்வதில்லை. 

முதலில் நம் சுய நலத்திற்காக அணைகளை கட்டினோம். நதிகளின் உயிரோட்டத்தை தடுத்து நிறுத்தினோம். காடுகளில் உள்ள நதிகள் கூட வறண்டு போனது. விலகினங்கள் யாவும் தேங்கிய நீரில் நீர் அருந்துகின்றன. இது நோய்களை ஏற்படுத்த வழிவகுக்கிறது. தமிழக காடுகளில் அதிக அளவு யானைகள் இறந்து போவது குறிப்பிடத்தக்கது. நதிகள் யாவும் வறண்டு போனது யாரால்? அளவுக்கு மீறி மணல் அள்ளப்படுவது யாரால்? நம்முடைய நீர் நிலைகளை யார் ஆக்கிரமித்தார்கள்? ஏரிகள் குளங்கள் எல்லாம் என்ன ஆயின? நம்மிடம் இருந்த இயற்கை வளங்களை தொலைத்துவிட்டு நதிகளை இணைப்பது யாருக்காக? நதிகளை இணைத்தால் சுற்றுச் சூழலில் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். 

சாதாரண குளங்களையும் குட்டைகளையும் நம்மால் பாதுகாக்க முடியாத போது நதிகளை இணைத்து என்ன செய்ய போகிறோம்? அண்டை மாநிலங்களை குறை சொல்லும் நாம் நம்முடைய நதிகளை என்ன செய்தோம்? காவிரியில் கலக்கும் துணை நதிகளான நொய்யல், பவானி, அமராவதி ஆகிய நதிகளின் இன்றைய நிலை என்ன ? மற்ற மாநிலங்களை குறை சொல்வது நமக்கு எளிதான வழி. நம்முடைய குறைகளை நாம் மறைத்துக் கொள்ள இது வசதியாக இருக்கிறது. ஆனால் இயற்கையும் காலமும் நமக்கு பதில் சொல்லும். அது கற்றுக் கொடுக்கபோகும் பாடம் வரலாற்றில் இருக்கும். 

Tuesday, February 14, 2017

எதிர்காலச் சமூகம் குறித்து ஏன் அச்சப்பட வேண்டும்? 

-       எதிர்காலம் குறித்த அச்சங்களை உருவாக்குவதல்ல, என் நோக்கம். மாறாக, எதிர்காலம் குறித்த விருப்பங்களையும் புரிதல்களையும் முன்வைக்கிறேன். நிச்சயமாக, இப்போதுள்ள வாழ்க்கை வாய்ப்புகள் எதிர்காலத்தில் கிடைக்கப்போவதில்லை. உணவு, நீர், காற்று, நிலம் ஆகிய நான்கு வாழ்வாதாரங்களும் கடந்த முப்பதாண்டுகளுக்கு முன் இருந்த நிலையில் இப்போது இல்லை. இவை அனைத்தும் தரம் கெட்டவையாகவும், நஞ்சு மிகுந்தவையாகவும் மாற்றப்பட்டுள்ளன. பொருளாதாரம் எனும் அளவுகோல் இப்போது மிக மோசமான ஆதிக்கத்தில் இருக்கிறது. எல்லாவற்றையும் பொருளாதாரத்தின் வழியில் மட்டுமே அணுகும் மனநிலை வளர்ந்துவிட்டது.

அரசுத்துறை எனும் கருத்து அதிவேகமாக வீழ்ச்சியடைந்து கொண்டுள்ளது. சமூகப் பாதுகாப்பிற்காகத்தான் அரசு எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. மக்களுக்கும், நாட்டின் இயற்கை அமைப்பிற்கும் அரணாக இருக்க வேண்டியது அரசின் கடமை. இப்போது அரசு எனும் அமைப்பு, அதிகாரம் அற்றதாக மாறிக்கொண்டுள்ளது. தனியார் பெருநிறுவனங்கள்தான் நாட்டின் பெரும்பாலான தொழில்களை நடத்துகின்றன.

நிறுவனங்களின் பிடியில் உணவுத்துறை சிக்கிக்கொண்டுள்ளது. பசுமைப் புரட்சிக்குப் பிந்தைய வேளாண்மை, தனியார் நிறுவனங்களைப் பெருமளவு சார்ந்ததாகிவிட்டது. உரம், விதை, வேளாண் கருவிகள் ஆகியவற்றைத் தனியார் நிறுவனங்கள்தான் வழங்குகின்றன. அரசாங்கம் இவற்றுக்கான மானியத்தை மட்டும் தருகிறது. எல்லா மானியங்களும் குறைக்கப்படுகின்றன. வெகு விரைவில் வேளாண்மைக்கான மானியங்கள் நிறுத்தப்படும். அந்த நிலையில் வேளாண்மையின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் ஒரு சில தனியார் பெருநிறுவனங்களின் பிடிக்குள் சென்றிருக்கும்.

வேளாண் விளைபொருட்களை விவசாயிகள் பொதுச் சந்தைக்கே எடுத்துவர இயலாத நிலை உருவாகும். பெருநிறுவனங்கள் தமக்குள் கூட்டமைப்பை உருவாக்கிக்கொண்டு, எல்லா விளைபொருட்களையும் தாங்கள் மட்டுமே கொள்முதல் செய்யப் போகின்றன.

அவ்வாறான சூழலில் உணவுப் பொருட்களின் விலை, கற்பனைக்கெட்டாத வகையில் இருக்கும். இப்போது ஆடம்பரங்களுக்காகக் கடன் வாங்கும் மக்கள், அடிப்படைத் தேவைகளுக்காகக் கடன் வாங்க வேண்டி வரும். உணவு மட்டுமல்ல, நீரும் இவ்வாறான நெருக்கடிகளுக்குள்ளாகும். இப்போதே குடிநீர் தனியார்மயமாகத்தான் இருக்கிறது. கிராமப்புறங்களிலும் சிறு நகரங்களிலும் மட்டும் அரசு குடிநீர் வழங்கிக்கொண்டுள்ளது. மாநகரங்களில் அரசு வழங்கும் நீரின் தரம் மோசமாகியுள்ளது. அந்தத் தரம் கெட்ட நீரும் போதுமான அளவுக்கு வழங்கப்படுவதில்லை.

ஏரிகள், குளங்கள் போன்ற இயற்கை நீர்க் கலன்களை ஏறத்தாழ இழந்துவிட்டோம். அவற்றைப் போற்றிப் பராமரிப்பதில், இந்தச் சமூகத்தின் பெரும்பகுதி மக்களுக்கு விருப்பமில்லை. ஏனெனில் ஏரி, குளங்கள் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள் வணிக நிலங்களாக (real estate) மாற்றப்பட்டுள்ளன. அவற்றின் பரமாரிப்புக்காக ஒதுக்கப்படும் தொகையை அதிகாரிகளும் ஊர் மக்களும் இணைந்து பங்கிட்டுக்கொள்கிறார்கள். அல்லது ஊர் மக்களின் எதிர்ப்புகளை மீறி அரசியல்வாதிகள் அப்பணத்தைச் சுருட்டுகிறார்கள்.

எவ்வளவு மழை பெய்தாலும் நீரை நிலத்தில் தேக்கிவைக்க இயலாத நிலைக்குத் தமிழகம் சென்றுவிட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு இறுதியில் பெய்த பெருமழையைத் தேக்கி வைத்திருந்தால், குறைந்தது இரண்டாண்டுகளுக்கு வேளாண்மை செய்திருக்கலாம்; குடிநீருக்கும் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், வெறும் ஆறே மாதங்களில் அம்மழை நீர் வற்றிப்போனது. வறட்சியினால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் செய்தி அன்றாடம் வந்து சேர்கிறது. இதுதான் நிலைமை.

பெரும்பான்மைச் சமூகத்தின் போக்கு இப்படித்தான் இருக்கிறது. இப்போக்கு முற்றிலும் மாறப்போவதில்லை என்பது என் எண்ணம்.

பெரும்பான்மையரிடம் உரையாடி, அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவது இயலாது என்றும் நான் நினைக்கிறேன். ஆகவே, இவ்வாறான புரிதல்கள் கொண்ட சமூகத்தினரிடம் உரையாடி அவர்கள் வழியாக எதிர்காலத்தைப் பற்றிய நல்ல விருப்பங்களை உருவாக்க வேண்டும் என எண்ணுகிறேன்.

நமது செயல்பாடுகள் யாவும் சீர்திருத்தங்களுக்கானவை அல்ல, அடிப்படை மாறுதலுக்கானவை. நமது மூத்த தலைமுறை நமக்கான வாழ்க்கையை விற்றுவிட்டது. அவர்கள் அறியாமையில், பேராசையில், ஏமாளித்தனமாக நம் மரபுகளை உதறி வீசிவிட்டார்கள். நாம் தனித்து விடப்பட்டுள்ளோம். அரசும், நிறுவனங்களும் இணைந்து நமது இயற்கைச் சூழலை, அடிப்படை வாழ்வாதாரங்களைப் பறிக்கின்றன. இணைந்து காக்க வேண்டிய நாம், பிரிந்து கிடக்கிறோம். ஒரு சமூகமாக நாம் மாற வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. இந்தச் சமூகத்தில் இடம்பெறுவோர் அவரவர் பண்புகளால் தீர்மானிக்கப்படுகிறார்களே தவிர, வேறெந்தக் காரணிகளாலும் அல்ல. ஏழ்மையில் ஆழ்ந்து கிடப்போர், செல்வத்தில் வீற்றிருப்போர் எவராக இருந்தாலும் மரபுவழிப்பட்ட புதிய சமூகத்தை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தால் போதும்.

இயற்கையையும் சகமனிதர்களையும் சுரண்டி வாழ்ந்த பாவங்களின் பலனாகத்தான் இவ்வளவு துன்பங்களும் வந்து சேர்ந்துள்ளன. இதுதான் என் கருத்து. இப்பாவங்களின் விளைவுகளிலிருந்து தப்ப வேண்டுமானால், முதலில் ‘நான் பாவங்களைச் செய்துள்ளேன்’ என மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ள வேண்டும். பின்னர், ‘இனி சக மனிதர்களுக்கும் இயற்கையின் பிற அங்கங்களுக்கும் எதிராகச் சிந்திக்கவும் செயல்படவும் மாட்டேன்’ என்று முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில், இந்தத் தீவினைச் சுழற்சியிலிருந்து வெளியேற இயலாது.

Friday, February 3, 2017

Questions

They ask you questions.

When you answer, they ask you more.

When you start using big words, they ask for clarification.

When they can’t understand anything you’re saying, they ask for you to explain it to them as if they were a five-year-old.

When you say something intriguing, they write it down in their notebook or phone.

These people are not naturally more intelligent. They’re better learners which makes them more intelligent.

Why do they learn better?

They’re genuinely curious and ask questions from a humble standpoint. I’ve met billionaires who’ve said, “explain it to me as if I were a five-year-old.”

This simple phrase has changed my life when it comes to learning.

It comes back to the famous Chinese proverb:

“He who asks a question is a fool for five minutes; he who does not ask a question remains a fool forever”


As soon as you stop asking questions, you stop learning.As soon as you stop writing down ideas, you forget them.

The hardest part of becoming intelligent is not bullshitting yourself about what you know; it’s being humble enough to ask questions. If you can do this, then people will see you as intelligent, too.