Tuesday, October 15, 2013

Tamil quotes............

  • ஒரு யுகமென்பது உன் கோபத்திற்கும் புன்னகைக்கும் இடைப்பட்ட பொழுது

    பெண்களின் மனசாவது ஆழம்தான். ஆனா, குழந்தைங்க மனசு பாதாளம்!

    சேலைக்கு உருவம் கொடுப்பவள் பெண்!!


    தமிழில் இல்லத்து அரசி! இங்கிலீஷ்ல ஹவுஸ்வைஃப்!! #பெண்களை மதிப்பது தமிழ்தான்

    வசதி இல்லாதவன் ஆடு மேய்கிறான் - வசதி இருக்குறவன் நாய் மேய்க்குறான்..!

     "மரத்துக்கு ஒரு வீடு கட்டுவோம்" என்பது பறவைகளுக்கான வாசகம்!!

     மனைவி சமையல் பழகும் முன் மனைவியின் சமையல் பழகி விடுகிறது!

     கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1800+ கிலோமீட்டர் பயணித்திருக்கிறேன், ஒரே directionல பயணிச்சிருந்தா நானும் இமயமலை போயிருப்பேன் :)-

    கற்றது, தமிழ்; என்னை விற்றது, ஆங்கிலம்!

    காலில் சங்கிலியிடப்பட்ட கோவில் யானை ஆசி வழங்கிக்கொண்டிருக்கிறது, எல்லோரும் இன்புற்றிருக்க!

    முத்துக்குளித்தல் என்பது கடலில் மூழ்கி முத்தெடுப்பது மட்டுமல்ல, முத்தே நீ குளித்தால் அதுவும் முத்துக்குளித்தல் தான்... #மகள்

    என் பைத்தியக்காரத்தனங்களை ரசனை என்று ரசிக்கிறாய், உன் ரசனையை நான் பைத்தியக்காரத்தனமாய் பார்க்கிறேன்.

    'செலவிடு அல்லது செல்லவிடு' சமகாலக் காதலிகளின் கூற்று!

    தாமதிக்காது தருவது தானம் மதிக்காது தருவது பிச்சை.

    காலி கோலா கலம்கூட கோலாகலம் தருகிறது சிறுவர்களுக்கு, கால்பந்தாக உருமாறி!

    ஐயிரண்டு விரல்களால் ஆண்கள் செய்வதை Eye இரண்டால் செய்துவிடுகிறார்கள் பெண்கள்!

     மூன்றாம் நபர் உதிர்க்கும் சொல் நம்மை காயப்படுத்திவிடும் எனில் நாம் பலவீனமானவர்

     அவளுக்குச் சிறிய உதடுகள், அதனால்தானோ என்னவோ என்னைப்பர்த்து பெரிதாக புன்னகைப்பதில்லை!


     நான் ரசித்த வரிகள் அவள் இதழ்களுக்கானது!

     மெலிந்த இடையுடைய பெண்களையே விரும்புகிறான் என் நண்பன். பாவம், அவனுக்கு குறுகிய ரசனை!

     வெடி வெடிக்கும் முன்பே காதை பொத்திக்கொள்ளும் குழந்தைகள் போல, பெண் சிரித்தாலே காதல் எனக்கொள்ளும் இளைஞர்கள் :)

    சாமிக்காக முடி எடுத்தா மொட்டை..! சாமியே முடிய எடுத்துட்டா சொட்டை

    இல்லத்தரசி இல்லாத இல்லத்த ரசிக்க முடியாது!

     குப்பைகளை தள்ளிவிடும் வெளக்குமாறைவிட உறிந்து தனக்குள் சேமிக்கும் வேக்யூம்க்ளீனர் அழகாகதான் தெரியும்,சிலரது மனம்போல்!

    வாழ்க்கை நம்மை கொத்து பரோட்டோவாக கொத்திக்கொண்டிருக்கும் போது, அந்த சத்தத்தை யாராவது ரசித்துக்கொண்டுமிருக்கலாம்!

    கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 10% அழகு கூடுகிறது, 10வது மாதத்தில் 100% ஆகி குழந்தையாய் பிறப்பெடுக்கிறது.!!

    இந்த பூமியில் வாழ்ந்த, வாழும் மனிதர்கள் அத்தனை பேரிடமும் திட்டு வாங்கியது வாழ்க்கையாகத்தான் இருக்கும்.!

     திருமணம் செய்தும் சிலர் பேச்சிலர் வாழ்க்கை வாழ்கின்றனர். பேச்சிலர் என்ற பெயரில் சிலர் திருமண வாழ்க்கை வாழ்கின்றனர்.

     என்ன சொன்னாலும் குறைகளை மட்டுமே காண்பவர்கள் காதலின் மகத்துவத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை

     இரவு நேரங்களில் இரு நிலாக்களோடு உலா வருவதன் சுகம் காதலனுக்கு மட்டுமே கிடைத்த வரம்

     வாழ்க்கையில் பிழைகள் இல்லை. வாழ்வதில்தான்...

     நீ என்னை தொட்டுப் பேசும்போதெல்லாம் தொட முடியாத தூரம்வரை சென்று வருகிறேன் நான்


    அழகாகக் கோபப்படுகிறாள் அவள். கன்னம் சிவக்கிறது எனக்கு...!!! (அடிச்சுட்டா மச்சான்.)

     நீ தொலைதூரத்தில் வரும் பொழுதே தொலைந்து போய் விடுகிறேனடி...

    ஏதேதோ கேள்விகள் கேட்கிறாள்.பதில் சரியென்றால் கன்னம் கிள்ளுகிறாள்.தவறென்றால் காதைத் திருகுகிறாள். சொர்க்கம்!!!

     சாலையில் விபத்துக்குள்ளானவனை பார்த்து 'பாவம், சின்ன வயசு' என நகருகிறார்கள் கொஞ்சமும் வளராதவர்கள் :)

    காலையில் முகம் கழுவாமல் முன்னே வரும் பெண்.. அழகு...! பேரழகு...!!

    பணத்தை, வெள்ளக்காரன் செலவு பண்றதுக்காக சேர்த்தி வைக்கிறான், நாம செலவு பண்ணாம சேர்த்தி வைக்கிறோம் :)

    அழகை ஒரு குணமாகப் பார்காமல் குணத்தை ஒரு அழகாகப் பார்ப்பவருக்கு வாழ்கை அழகாய் இருக்கும்; # வழுக்கை கூட அழகாய் தெரியும்.

     குடைகள் அதிகமான பின், மழைகள் குறைந்து விட்டன.!

    இப்ப எல்லாம் காதல்ல தற்கொலைகள் குறைஞ்சு போச்சு தான், ஆனா கொலைகள் அதிகமாயிடிச்சு

    ஆண்களின் பலவீனம் அப்பட்டமாய்த் தெரிகிறது இணைய உலகில்...

     நான் மட்டுமல்ல நீ வைத்த சங்குசக்கரமும் உன்னையே சுற்றுகிறது பார் !

     உன் கூந்தலில் குடியேறிய பின் பூக்களுக்கும் பிடிக்கலாம் உன் வாசனை !!

    உனக்கு பெயராய் இருப்பதை விட வேறென்ன பெருமை கிடைத்துவிட முடியும் உன் பெயருக்கு ??!!

     நீ குளித்து விட்டு வெளியேறியதும் நீருக்கும் பிடிக்கலாம் ஜலதோஷம் !!

     தேடி செல்லும் காதல் , காதலில்லை நண்பா ! உண்மை காதல் சொல்லவா ? நல்லகாதல் என்பதென்ன தேடி வந்த காதலே!! :) #பாபா

     திருமணம் என்பது சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது அல்ல, சரியான துணையாக இருப்பது..!

     நாம் கண்ணீர் சிந்தி அழுதால் இதயம் லேசாகும், அடுத்தவனை கண்ணீர் சிந்த வைத்தால் நம் இதயம் கல்லாகி போகும்.

     ஓர் ஆணின் வாழ்வை பொன்னாகவும் , மண்ணாகவும் மாற்றும் வித்தை ஒரு பெண்ணிடமே இருக்கிறது.

     பறக்கும் தட்டுகள் பற்றி எந்த நம்பிக்கையும் இல்லாமல் தான் இருந்தேன், கல்யாணமாகும் வரை.!

    ஒரு மனிதன் செட்டில் ஆவது என்பது அவன் சவக்குழிக்குள் செல்லும் தினம் தான்!

     அடுத்தவர் நம்மீது வீசி எறியாதவரை உணரமுடிவதில்லை,சில வார்த்தைகளின் வீரியத்தை..

     ஓயாமல் ஆர்ப்பரிக்கும் அலைகடலின் ஓரத்தில் அமர்ந்திருக்கிறான், அமைதி தேடிவந்த மனிதன்!

     "உ"ருவத்தையும் , "ஊ"தியத்தையும் பார்த்து காதல் செய்தால் கடைசியில் உ,ஊஊஊஊ தான்!!

    எதையாவது பிடித்துக்கொண்டு எழுந்து நிற்க முயற்சிக்கின்றது குழந்தை # நம்மில் சிலரிடம் தான் அந்த நம்பிக்கை இல்லை.

    எல்லா உறவுகளுக்குள்ளும், ஒரு சிறு இடைவேளி இருக்கிறது, அது நிரப்பப்படாத வரையே அந்த உறவு நீடிக்கிறது...!

     ஓர் ஒன்பதாம் வகுப்பு பெண்ணிடம் காணப்படும் வெட்கத்தின் நளினமும் பூரணமும் அதற்கு முன்போ பின்போ வேறெப்போதும் சாத்தியப்படுவதில்லை.

     தனியே இருப்பது சுலபமாக இருந்தாலும்...தனிமை கிடைப்பது அவ்வளவு சுலபமாக இல்லை!

    என் வருங்கால மனைவிக்கு நல்ல கணவன் கிடைப்பானோ தெரியாது,ஆனால் நிச்சயமாக ஒரு சிறந்த மாமியார் காத்துகொண்டிருக்கிறார்....

     காலம் தன் வசத்திற்கே என்னை வளைக்கப்பார்க்கிறது முடிந்தபோது வளைகிறேன், முடியாத போது உடைந்து தான் போகிறேன்...

    உன்னைக் காதலிக்காதவனுக்கு இதயம் கிடையாது உன்னைக் காதலிப்பவனிடம் இதயம் இருக்காது

     இதயம் ஒரு பைத்தியக்காரத் தொழிலாளி. நீ பார்வைச் சம்பளம் தரும் நொடியில் ஏன் வேலை நிறுத்தம் செய்கிறது?

     நீ கை அசைத்தால் எல்லாப் பேருந்தும் நிற்கிறது. நீ கண் அசைத்தால் எல்லா இதயமும் நிற்கிறது!


    சில பெண்கள் முன் அழகு சில பெண்கள் பின் அழகு நீதான் முன்பின் காணாத அழகு

    என் இதயத்தில் நான்கு அறைகள் இருக்கும்போது, நீ ஏன் என் கண்ணத்தில் அறைந்தாய் #கவித!
     நீ வாழும் ஊரில்
    நிமிடத்துக்கு 72 தடவை நிலநடுக்கம்...
    #என் இதயம்
    காதலித்து பார்... கமல், இளையராஜா பேசுவதெல்லாம் உனக்கு புரியும்.
     உன் மௌனம்தான் என்னை கொல்லும் முதல் ஆயுதம்.. !! சுறா படம் கூட இரண்டாவது இடம்தான் ..!!
     குழந்தையாய் இருக்கும்பொழுது கோடிக்கணக்கில் இருக்கும் உலகஅதிசயங்கள் வளர்ந்தவுடன் வெறும் ஏழாகி விடுகின்றன
    என்னடி செய்தாய் என்னை...? அம்மா தலை சீவி விடுகிறாள்.கோபப்படுகிறேன். நீ தலை கலைத்து விடுகிறாய்.சிரிக்கிறேன்...!!!  
    தேர்வு முடிந்தபின்பே பாடம் நடத்த ஆரம்பிக்கிறது வாழ்க்கை 
     இசையருவில டிவிய பார்த்து பேசாதீங்கன்னு சொல்றதுல எதோ சூட்சுமம் இருக்கு... 
     என் மகளை பொறுத்தவரை ரகசியம் என்பது காதருகில் சொல்லப்படும் ஒரு விஷயம் அவ்வளவுதான்..அதை யாரிடமும் நாம் சொல்லலாம்...
    காதல் தோல்விக்கு பிறகான போதையைவிட காதலிக்கும் போதிருக்கும் போதை மோசமானது #தலைகீழாநடக்கறாங்க  
    உன் சிறு புன்னகைதான் உணர்த்தியது...வாழ்வதற்கான சாத்தியங்கள் உதட்டசைவுகளிலும் இருக்குமென்பதை

    நீயில்லாமலும் நாட்கள் நகர்ந்து கொண்டுதானிருக்கிறது..நான் தான் தேங்கிவிட்டேன்
     
    ஆண்களில் இரண்டு வகை :- 1. பெண்களால் மாறுபவர்கள் 2.பெண்களுக்காக மாறுபவர்கள்

    என்னைக் காதலிக்காததால் நீ இழந்தது என்னை..நான் இழந்ததும் என்னை  
    என் கனவில் நீ வாழ்க்கை..என் வாழ்வில் நீ கனவு

    என் தனிமையை குலைப்பதற்கென்றே வந்துவிடுகின்றன உன் நினைவுகள் 
    திருமணம் என்பது சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது அல்ல, சரியான துணையாக இருப்பது..!

       பிறர் செய்யும் பிழைகளை சுட்டிக்காட்டும்போது புரிவதில்லை நாமும் செய்யப்போகிறோம் என்று.

    பெண்ணிலவே ...உன்மீதான பாசம் வளர்பிறைபோல் வளர்ந்து கொண்டே இருக்கிறது ..நல்லவேளை நீ வெண்ணிலவாக வில்லை# தேய்பிறையை சந்திக்க நேரிட்டிருக்கும்
    கவிதையில் காதல் சொல்பவர்கள் தக்க தருணத்தில் காதலைச் சொல்லுங்கள் உங்கள் கவிதையிடம்.  

    ஆண்கள் கவிதைகளைப் பிறக்க வைக்கிறார்கள். பெண்கள் கவிதையாகவேப் பிறக்கிறார்கள்...!!!
    மழையில் நனைகிறேன்... மழலையாய் உணர்கிறேன்.  

    எந்தப் பாதையைக் காதலித்துத் தன் காதலைச் சொல்லியிருக்குமோ செருப்பு - (செருப்பு பிஞ்சிடுச்சி)
    புத்தகத்திற்குள் வைத்திருக்கும் மயிலிறகைப் போல என்னுள் வைத்திருக்கிறேன் உன்னை...  

    எவருக்கும் தோன்றிடாக் கவிதை நீயடி...
    என்னை அலட்சியம் செய்து செல்லும் பெண்களுக்கெல்லாம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அதிலும் என்னவள்தான் முதன்மையானவள். 

    என்னை இழந்ததற்காகக் கூட வருத்தப்படவில்லை. எங்கே உன்னை இழந்து விடுவேனோ என்றே வருத்தப்படுகிறேன் நான்.

     "ஐ hate யூ டியர்!", இந்த அளவிற்கு தெளிவாக பேச பெண்களால் மாத்திரம் தான் முடியும்!

     கத்திவிடும் பெண்களை விட உதடுக் கடிக்கும் பெண்களையே பிடிக்கிறது!

     பெண்ணைப் பற்றி பெருமையாக சொல்வதை சிறப்பாக கையாளத் தெரிந்தவர்கள் கவிஞனாகின்றனர்; மற்றவர்கள் ஜொள்ளர் ஆகின்றனர்.!

     அழகிய பெண்களுக்கு 'ஸ்பாம்' males அதிகம்!
     
    காதல் சொல்லப்படாமலே... காதலிக்கப்பட விரும்புகின்றனர் பெண்கள்.!

    அவள் மீது கொண்டுள்ள நாட்டம் 'நட்பா', அல்லது வெறும் 'காதல்' தானா?

    நீ பேசிய வார்த்தையினுள் இருந்த மெய் எழுத்துக்களும், உயிர்எழுத்துக்களாகி வெளிவந்தன, உன் உதடு பட்டதால்..

    தட்டுங்கள் திறக்கப்படும்
    கேளுங்கள் கொடுக்கப்படும்
    இரண்டுமே பொய்.. 
    ...நீயே திறந்துக்கொள்
    நீயே எடுத்துக்கொள்
    இல்லையெனில்...
    எந்தக் கதவை தட்டுவதென்பதிலும்
    யாரைக் கேட்பதென்பதிலும் 
    தவறுகள் நிகழ்ந்துக்கொண்டே இருக்கும்.
     
    நமக்கு மேலே 
    ஒரு குடை..
    நிமிர்ந்துப் பார்க்கையில் 
    தாயின் இமை. 
     
    எத்தனை முறை தவறுசெய்தாலும்
    காதலில் மட்டும் கற்றுக்கொள்ளவே முடிவதில்லை...
     
    இந்த உலகில் காமம் மட்டும் இல்லையெனில் 
    நான் தான் சிறந்த ஞானி :) 
     
    பட்டாம் பூச்சிகளால்
    வானத்தில் பறக்க முடியாது..
    அவை பறக்குமிடமே
    அதற்க்கு வானம்தான். 
     
    ...சில உறவுகளால் 
    தொடர்ந்துவர முடியாது..
    அவை தொடங்குவதே 
    வாழ்வில் அழகுதான். 
     
    இப்போதெல்லாம்
    அலுவலகம் நுழைகின்ற போது...
    எதோ ஒரு பிடிக்காத உறவினர் வீட்டிற்கு
    தவிற்க்கமுடியாமல் போவதைப்போல் 
    ஒரு அசொவ்கரியம் நிலவுகிறது.
     
     
    நான் மட்டும் தான் 
    இப்படி என நினைத்தேன்..
    கோவில் வாசலில் 
    செருப்புகளை போல்
    அலுவலக வாசலில் 
    பலரும் மனதை 
    விட்டுவிட்டே செல்கின்றனர்..
     
    ப‌ள்ளியில் தான் தொட‌ங்குகின்ற‌ன அனேகம் ந‌ட்புக‌ள். அந்த நட்புக்கு என்றுமே நீங்காத இடம் உண்டு நெஞ்சில். முதன் முதலில் பிரிவு என்ற சொல்லை சந்திப்பதும் அந்த நட்பு தான். பள்ளி தான் உலகமே என்று நம்பிக்கொண்டிருக்கும் ஜீவன்களை பிரித்து உலகின் வெவ்வேறு மூலைகளில் வீசிவிடுகிறது காலம். ஆசைக்கு த‌க்க‌ப‌டி, ஆஸ்திக்கு த‌க்க‌ப‌டி ஆளுக்கு ஒரு திசை நோக்கி ப‌ய‌ண‌ப்ப‌டுகிறோம்…….. சுழ‌ன்று கொண்டே இருக்கும் உல‌க‌த்தில் என்றேனும் ஒரு நாள் மீண்டும் சேருவோம் என்ற‌ ந‌ம்பிக்கையோடு 
     
     

     
     
     




No comments: