Friday, September 30, 2016

War elango

அமெரிக்கர்கள்  வாக்களிக்க உள்ளனர். டிரம்ப் நிமிடத்திற்கு மூன்று பொய்களுக்குக் குறையாமல் சொல்பவர். ஹிலாரி இதுவரை பெரும்போர்களை நடத்திக் கொண்டிருக்கும் பெண்மணி. அமெரிக்காவிற்கு மட்டுமல்ல மற்ற நாடுகளுக்கும் பெரிதாக ஒன்றும் மாற்றமில்லை. உலகமையப் பொருளாதாரம் தன் உச்சத்தில் இருக்கிறது. அமெரிக்கர்கள் நல்லவர்கள் தானே. நடுத்தர பொருளாதாரம் அசையும் என்றால் எல்லா பாவங்களையும் செய்ய முடியும் அமெரிக்காவால். ஆயுதத் தொழிற்சாலைகள் ஒழிந்தால் அமெரிக்கர்களுக்கு வேலை இருக்காது போர்கள் இல்லையென்றால் அமெரிக்காவிற்கு சோறு கிடைக்காது என்று நம்ப வைத்துவிட்டார்கள். சிரியாவை பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு இராக்கின் முடிவின் போது குறி வைத்தார்கள். இன்று சிரியா சிதறிய நாடு. கடாபி சதாம் என்று ஓரளவிற்கு மக்கள் நலன் சார்ந்த ஆட்களைப் போட்டுத் தள்ளிக் கொண்டேஇருக்கிறார்கள்.
அடுத்து வடகொரியா என்கிறார்கள். எப்படியும் பெரும்பணம் சம்பாதிக்க அதுவே வழி என்று இறங்குவார்கள்.

இதற்கெல்லாம் மூல காரணம் என்ன?  ஒன்றே ஒன்று தான். அமெரிக்காவின் பொருளாதார வங்கியியலின் தத்துவம். லாபம் சம்பாதிக்கும் எண்டெர்ப்ரைஸ் எக்கானமி என்று சொல்லி எதில் லாபம் வந்தாலும் முதலை போடுவார்கள். தொடர்ந்து அழிவுக்கான பாதையை வழி நடத்துகிறார்கள். லாபத்தை உச்சச்த்திற்கு கொண்டு போக ஒரேசூத்திரம் தான். மக்களைத் தொடர்ந்து அச்சத்தில் வைத்திருக்க வேண்டிய கருத்தியல்கள். அந்தக் கருத்தியல்களின் வழி ஆயுதங்கள். கடவுளுக்குக் கூட ஒரு தர்க்கம் கண்டுபிடிக்கலாம். இந்த பணத்திற்கு ஒரு தர்க்கமும் இல்லை. அக்கம்பக்கம் பார்க்காமல் இருக்க மில்டன் பரீட்மெனின் புத்தகங்கள் உதவும். பேராசை தான் நம்மை உயிரோடு வைக்கும் என்கிற பொருளாதார அடிப்படையை அமெரிக்க உருவாக்கிவிட்டது. தீ பற்றி எரிகிறது.  இந்தியாவுக்கு மோதி இருக்கிறார். போர் போர் என்று கத்திக் கொண்டு ஓடுவார்கள்.
முடிவில் எல்லா நிறுவனங்களும் கணக்குப் பார்ப்பார்கள். மக்கள் உலகம் முழுவதும் போர்களைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

excuse me . இந்த பணத்தை ஒழிப்பது எப்படின்னு யாருக்காச்சும் தெரியுமா? அதே தான் சட்டையைக் கிழித்துக் கொண்டு திரியும் பைத்தியம் நாங்கள்.

No comments: