பொருளாதாரத்தை எப்போதும் புள்ளி விபரங்களால் நிரப்பி நம்ப வைப்பதில் முதலாளித்துவம் வெற்றி பெற்றுள்ளது. இன்று வரை உற்பத்தி பெருக்கத்திற்கு மட்டுமே புள்ளி விபரங்களை அடுக்கியிருக்கிறார்கள். தொழிற்சாலைகள் தோறும் எவ்வளவு அதிகமாக உற்பத்தி பெருகுகிறதோ அதுவே பொருளாதாரத்தை அளக்கும் அளவுகோல் என்று வைத்துள்ளார்கள்.Manfred Max-Neef எழுதிய Outside Looking In: Experiences in Barefoot Economics எடுத்துப் படிக்க வேண்டும். நம்முடைய பல்கலைக்கழக பொருளாதாரப் படிப்பின் அர்த்தமின்மையை உணர முடியும். பொருளாதார வல்லுனர்கள் எப்படி பிறதுறைகளின் அறிவற்ற மூடர்களாக இருக்கிறார்கள் என்று வெளுத்து வாங்குகிறார்.
புதிய சந்தைப் பொருளாதாரம் வளர்ச்சி என்கிற கோசத்தை முன்வைக்கிற போது மூன்றாம் உலக நாடுகள் என்ன விதமான ஏழ்மைக்கும் நோய்மைகளுக்கும் ஆளாகிறார்கள் என்பதை கேள்விகளால் துளைக்கிறார்.
நாம் திரும்பிப் போக முடியாது என்று கைவிட்டுவிட்டோம். சூழலியல் முதல் மக்கள் நலன் மற்றும் உயிர்களின் நலன் பற்றி எந்தப் பொருளாதார அறிஞனும் எதையும் முன்வைக்க வில்லை. இல்லை நமக்கு எவ்வளவு சேதாரங்கள் வந்தாலும் கவலை கொள்ளத் தேவையில்லை என்று மாற முடியாது என்று கைவிட்டுவிட்டோம்.
மேக்ஸ் நீப் என்ன சொல்கிறார் என்றால் பொருளாதார மேதைகள் இதுவரை தங்களுக்குத் தெரியாத விசயங்களைப் பற்றி உளறிக் கொட்டியிருக்கிறார்கள். அதனால் அதற்கான மாற்றை முன்வைக்கிறார். பொருளாதாரம் என்பது சூழலின் துணைத் கட்டமைப்பே தவிர அதுவே சூழல் அல்ல. trend என்று சொல்லி இன்று முன்வைக்கிற எதுவும் நம்மால் பின்னால் இழுத்துச் செல்ல முடியாது என்கிறார். நாம் பேரழிவை குறைத்து மதிப்பிடுகிறோம் . சக மனிதனுக்கான அன்பை பற்றியெல்லாம் பொருளாதாரத்தில் இடமளிக்காமல் இருக்கிறோம் . அவற்றினை நோக்கிய தீர்வுகளைச் சொல்கிறார். நம்மை சுயநலத்தில் இருந்து விடுவிக்கும் முன்னேற்றப் பாதைக்கு சரியான பொருளாதாரப் பார்வையில் தான் விடை இருக்கிறது என்று சொல்கிறார்.
இவர் பெர்க்லி பல்கலைக் கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர். சென்ற மாதம் மில்டன் ப்ரீட்மன் பற்றி புலம்பிக் கொண்டிருந்தேன். நம்பிக்கை இல்லாம பேசுறீங்க. மாற்று என்ன என்று கேட்டார்கள்.
இந்தா இவரு பேசுறதை எல்லாம் தேடிக் கேளுங்கள். நம்பிக்கைகள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் போக வேண்டும்.
No comments:
Post a Comment